பிஎஸ்பிபி பள்ளி புகார் குறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி என்ன சொல்கிறார்..

Update: 2021-05-24 18:21 GMT

பி.எஸ்.பி.பி பள்ளி புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னும் இதுப்போன்ற சம்பவம் நடைப்பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் எனவும் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்..

சென்னை தலைமைசெயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் துறை சார்ந்த ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இதில் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் லதா, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெயந்தி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்,

பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்துவது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது என்றும், இன்று மதியம் இறுதி முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்தார்.

PSBB பள்ளியில் ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பள்ளியும் ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அதன் பின் உரிய விளக்கம் அரசுக்கு தெரிவிப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.மேலும், ஏற்கனவே இதுபோன்ற புகார் பள்ளியின் மீது பெற்றிருந்தால் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிப்பட கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை, ஆனால் விரைவில் அதற்கான பணிகள் ஆன்லைன் வாயிலாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள் என தெரிவித்த அவர், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனி கவனம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருப்பூர் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஜூன் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது என்றும், பெற்றோர்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News