இயற்கைக்கு ஏன் இவ்வளவு அவசரம்..? ஸ்டாலின் இரங்கல்

விவேக் மறைவு: ஸ்டாலின் இரங்கல்;

Update: 2021-04-17 05:07 GMT

நடிகர் விவேக் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News