தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கல்

சென்னையில், தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-11-30 13:45 GMT

தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற விழா.

தமிழ்த்தன்னுரிமை இயக்கம் சார்பில்,  மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்காம் ஆண்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில், மகாகவி பாரதி நூற்றாண்டு விழா நினைவு நாள் விழா, கி ஆ பெ விசுவநாதம் பிறந்தநாள் விழா, அரிமா பொறியாளர் டாக்டர் துரையரசன் பிறந்தநாள் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்த்தன்னுரிமை இயக்கத்தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழா தமிழா பாண்டியன் வரவேற்றார். துரையரசன் பேசுகையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நாளை  கொண்டாட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில்,  அக்னி சுப்பிரமணியன், அயன்புரம் பாபு உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்கள்,  பேச்சாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழ் மொழி, இனம், தமிழ்நாடு என வாழும் அறிஞர் பெருமக்களுக்கு, விருதுகள், சான்றிதழ்களை துரையரசன் வழங்கினார். இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலையையும் அவர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் வரலட்சுமி, உலகநாதன் ரவி, ராஜேஷ் கண்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News