ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்;
சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்மசேஷாத்திரி பாலபவன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக , அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது . மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது .
இந்நிலையில் மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . இதன்படி கைதான ஆசிரியர் ராஜகோபாலன் புழல்சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஃபாருக் உத்தரவு பிறப்பித்துள்ளார் .