பெரும்பாக்கத்தில் புதிய விளையாட்டு மைதானம்..!
பெரும்பாக்கத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. இந்த மைதானம் அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை,பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ரூ.4 கோடி செலவில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இது இந்த பகுதி மக்களின் உடல் நலத்தையும், சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது குறித்த சில விரிவான விஷயங்களை பார்க்கலாம் வாங்க.
முக்கிய விவரங்கள் :
இந்த விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடம் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ.,க்கு இடைப்பட்ட பகுதியாக உள்ளது. மொத்தம் 2.25 ஏக்கர் பரப்பளவுக்கு அமைக்கப்படவுள்ளது. மொத்த செலவு ரூ.4 கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வசதிகள்:
ஓட்டப்பந்தய பாதை 650 அடி நீளத்தில் அமைக்கப்படுகிறது. 6 பேர் ஒரே நேரத்தில் ஓடும் வசதியுள்ளதாக அமையும். மேலும் இரண்டு கபடி மைதானங்கள், கோ கோ மைதானம், இரண்டு கூடைப்பந்து மைதானங்கள், கைப்பந்து மைதானம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகியன அமைக்கப்படுகிறது.
கூடுதல் வசதிகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள், 244 பேர் அமரும் இருக்கைகள் அமையவுள்ளன.
அப்பகுதி குடியிருப்பு பற்றிய தகவல்கள்
இந்த மைதானம் அமையவுள்ள பகுதியில் 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 6 அரசு பள்ளிகள்,1 கல்லூரி மற்றும் 1 ஐ.டி.ஐ உள்ளன.
8 இடங்களில் பூங்காக்கள் மொத்தம் 1 லட்சம் சதுர அடி அளவில் அமைக்கப்படவுள்ளது.
திட்ட நிலை
அடுத்த மாதம் பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.