விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : விக்கிரம ராஜா

மத்திய அரசு டோல்கேட் கட்டணத்தை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-16 17:00 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தவைர் விக்கிரம ராஜா பேட்டி அளித்தார்.

சென்னை வடபழனியில் புதிய வியாபார சங்கத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பின்  தலைவர் விக்கிரம ராஜா பேசியதாவது :

மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் மேலும் வணிக வளாகங்கள் செயல்படக்கூடிய பல்வேறு பகுதிகளில் கேமரா வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் .தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் கொரோனா நெறிமுறைகள் முறையாக பின்பற்றி மீண்டும் ஒரு ஊரடங்கு வராத அளவிற்கு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசுகள் கடைகளை பூட்டி வைக்கச் சொல்லி அறிவித்தது. அதற்கு பல்வேறு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது ஆனால் இதுவரை வழங்கவில்லை அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஊரடங்கு நேரத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த போது கடைகளுக்கு உள்ள வாடகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என சங்கம் வலியுறுத்துகிறது

நெல் கொள்முதலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்வது போல் தக்காளி மற்றும் மற்ற காய்கறிகளுக்கும் அரசே விலை நிர்ணயம் செய்து ஸ்டோரில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்.

மழை நேரங்களில் காய்கறிகளின் விலை உயர்வு என்பது இயல்புதான் ஆனால் இந்த முறை நமக்கு இயல்பாக அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறி வரத்து குறைந்து சத்தீஸ்கரில் இருந்து காய்கறிகள் வந்ததால்தான் விலை உயர்ந்தது.

மேலும் மத்திய அரசு டோல்கேட் கட்டணத்தை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News