முன்னாள் முதல்வர் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு விருகம்பாக்கத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ
முன்னாள் முதல்வர் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு விருகம்பாக்கம் சாதிக் நகரில் 500 பொதுமக்களுக்கு அறுசுவை உணவினை எம்எல்ஏ.பிரபாகர்ராஜா வழங்கினார் .;
விருகம்பாக்கம் திமுக , 128 அ வட்டம் சார்பில் திமுக நிர்வாகிகள் மற்றும் சாதிக்பாஷா நகர் , ஷேக்தாவூத் நகர் பகுதி திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை கொண்டாடினர் .
இந்த விழாவில் 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவாகிய பிரியாணி மற்றும் முக கவசம் , கிருமி நாசினி உள்ளிட்டவற்றை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜா வழங்கினார் .
இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் மு.ராஜா , 128 வட்டம் வட்ட செயலாளர் வி.ஏ.ராஜா, 128வது அ வட்ட செயலாளர் மு.கோவிந்தராஜன் உள்ளிட்ட பகுதி மற்றும் வட்ட பிரதிநிதிகள் , திமுகவின் அனைத்து அணி அமைப்பாளர்கள் , துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடி நீர் சுத்திகரிக்கும் கருவியை தமிழ்நாடு முஸ்லிம் மொகலய ஜமாதின் சார்பாக அதன் நிறுவன தலைவர் சுல்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு . பிரபாகர்ராஜாவிடம் வழங்கினார் .