தேமுதிக தலைவர் விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.;

Update: 2021-05-04 11:45 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியை விட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றார்.

தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்பு தேர்தலில் பெற்ற வெற்றிக்காக தன்னுடைய வாழ்த்துக்களை உதயநிதி ஸ்டாலினுக்கு விஜயகாந்த் தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News