பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் காமேஸ்வரன் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை

உடல்நலக்குறைவால் காலமான பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் மூத்த மருத்துவர் காமேஸ்வரன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2021-06-26 08:31 GMT

டாக்டர் காமேஸ்வரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : உடல்நலக்குறைவால் காலமான பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் காமேஸ்வரன் உடலுக்கு இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிரபல காது, மூக்கு,தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவரின் தந்தையும் பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவருமான காமேஸ்வரன் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனைக்கும் உள்ளானேன். 

மருத்துவர் காமேஸ்வரன் எண்ணற்ற இளம் எழுத்தாளர்களை உருவாக்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் நற்பெயரை பெற்றுத் தந்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு இணையற்ற நண்பராக இருந்தவர். அவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை  அமைச்சர் சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News