தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் தமிழக மக்கள் அனைவர் மனதில் எழுந்து இருந்தாலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஏற்கனவே சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.