தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,013 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக 4013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 24,92,420 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனாவிலிருந்து 4724 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 24,23,606 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 115 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 32933 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 227 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாநிலம் முழுவதும் 40,046 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 27,079 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6483 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.