தேர்தல் இடப்பங்கீடு : முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினை, விசிக தலைவர் தொல். திருமாவளவன், அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

Update: 2022-01-29 08:30 GMT

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக, சென்னையில் இன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற  சந்திப்பு பின்னர், நிருபர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

புத்தாண்டு பிறந்த பின்னர் முதலமைச்சரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக,  மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகின்றது. 2,3 நாட்களாக விசிக மாவட்டச் செயலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசிகவிற்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைமை பதவிகளில் விசிகவிற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். சனாதன கட்சிகள் கொட்டமடிக்கும் நிலையில் சமூகநீதியை பாதுகாக்க முதலமைச்சர் எடுக்கும் முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அரியலூர் மாணவி விவகாரத்தில், மதவாத சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News