சென்னை:பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் குழந்தைகள் நலகுழு முன் ஆஜர்

பாலியல் புகார் தொடர்பாக சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமுன் ஆஜராகினர்.;

Update: 2021-06-08 10:47 GMT

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின் போது அறைகுறை ஆடையுடன் வகுப்பு நடத்தியதாகவும், இவர் ஆன்லைனில் பங்கேற்கும் மாணவிகளுக்கு தவறான குறுந்தகவல் அனுப்புவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நல குழு முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News