கிண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்- அமைச்சர் வழங்கினார்!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.;
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் அரசு கொரோனா மருத்துவமனைக்கு ஆஸ்காட் குரூப் கேபிடல் லாண்ட் நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 20 ஆக்சிசன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, கிங் மருத்துவமனை இயக்குனர் நாராயண சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.