சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது
இலங்கையில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.;
இலங்கையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த 3 ஆண் பயணிகள் ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்தனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவா்களை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.
இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா்.அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 3 உருளைகளை கைப்பற்றினா்.அவைகளை திறந்து பாா்த்தபோது,தங்கப்பசைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
அந்த 3 உருளைகளிலும் 852 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினா்.அதன் மதிப்பு ரூ.37.88 லட்சம்.இதையடுத்து கடத்தல் பயணிகள் 3 பேரையும் சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.