தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி
தமிழகத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என மாநில போக்குவரத்துத துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.;
பைல் படம்
தமிழக நிதித்துறை அமைச்சர், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தபோது, அரசுப் பேருந்துகளை ஒரு கிலோ மீட்டர் இயக்கினால் ரூ. 59 நஷ்டம் ஏற்படுவதாக கூறியதை யடுத்து, பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைக்கு அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை. நிதிச்சுமைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். போக்குவரத்து துறை புதிய பொலிவுடன் இனி செயல்படும்.
மேலும், பேருந்து நிறுத்தங்களில் அம்மா குடிநீர் மீண்டும் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வண்டலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் , இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றார் அமைச்சர் கண்ணப்பன்.