தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் விஜயகாந்த் நம்பிக்கை
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்க உள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.;
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் தேமுதிக 17ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிக்கை இன்று வெளியிட்டுள்ளார்.
தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலி்ல்,அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்