தமிழகத்திறகான தடுப்பூசிகள் 6ம் தேதிக்கு பிறகு வரும்- அமைச்சர் தகவல்
வருகிற 6ம் தேதிக்கு பிறகு தமிழகத்திற்கு படிப்படியாக தடுப்பூசிகள் வரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் காலதாமதமின்றி தடுப்பூசிகளை பாரபட்சமின்றி அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வருகிற 6ம் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி வரத் தொடங்கும் என்று கூறினார்.