தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.