வில்லிவாக்கத்தில் நரிக் கதை சொல்லி வாக்கு சேகரித்த சீமான்

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்து, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். நரி கதை கூறினார்.

Update: 2021-04-01 13:15 GMT

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்து, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

''ஒரு ஊரில் ஒரு நரி இருந்ததாம். அந்த நரி செம்மறி ஆடுகளிடம் பேசியதாம். என்னைத் தலைவராக்கி விடுங்கள். உங்கள் எல்லோருக்கும் குளிர்காலம் வரும்போது கம்பளி தருகிறேன் என்றதாம்.

அப்போது ஆடுகள் அனைத்தும் மண்டையை ஆட்டிக்கொண்டே நரி பின்னால் சென்றன. அதுபோலத்தான் என்னைத் தலைவராக்கி விடுங்கள், உங்களுக்கு ரூ.1000 தருகிறேன், என்னை முதல்வராக்கி விடுங்கள் ரூ1500 தருகிறேன், வாஷிங் மெஷின் கொடுக்கிறேன் என்கிறார்கள். மக்களும் செவிசாய்க்கிறார்கள்.

கம்பளி செய்ய ஆட்டின் முடியைத்தான் நரி எடுக்கும் என்று தெரியாமல் ஆடுகளும், மக்களின் காசைத் திருடித்தான் இலவசங்களைத் தர முடியும் என்று தெரியாமல் மக்களும் இருக்கிறார்கள்.

பாட்டில்தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது; நாட்டில் போடவில்லை. நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என நினைத்தால் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களியுங்கள். திமுக, அதிமுகவைப் புறக்கணிக்காவிட்டால் ஊழலை அகற்ற முடியாது''. இவ்வாறு சீமான் பேசினார்.

Tags:    

Similar News