அதிக விலைக்கு மளிகைபொருட்கள் விற்றால் உரிமம்ரத்து: சென்னை ஆணையர் அதிரடி

அதிக விலைக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-06-01 10:03 GMT

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் காப்பதற்காக மாநகராட்சி சார்பாக நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 2,197 வியாபாரிகள் மளிகை பொருட்களை வாகனங்களில் விற்பனை செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.இந்த கடுமையான காலக்கட்டத்தில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News