சென்னையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் தொடரும் கனமழையால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-11-07 08:00 GMT

கோப்பு படம் 

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள், மற்றும் உள்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

சென்னையில் இருந்து அபுதாபி, சாா்ஜா, துபாய், கத்தாா் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 7 சா்வதேச விமானங்கள்,  30 நிமிடங்களில் இருந்தது ஒரு மணி நேரம் வரையிலும் தாமதமாகி உள்ளன.  அதைப்போல்,  கொல்கத்தா, டில்லி, மும்பை, ஹைதராபாத், தூத்துக்குடி, அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் 7 விமானங்கள்,  15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

தொடா் மழை காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை வரை 14 விமானங்களின் புறப்பாடு தாமதம் ஆகியுள்ளன.  மழை பெய்து கொண்டிருந்தாலும்,  வெளிநாடுகள், வெளியூா்களில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் இதுவரை தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றன.

சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மட்டும் தாமதமாவதற்கு காரணம், விமானங்களில் பயணிகளின் உடமைகள் ஏற்றுவதில் தாமதம், பலத்த மழையால் பயணிகளின் வருகை தாமதம், விமானங்களில் உணவு பொருட்கள் ஏற்றுவதில் தாமதம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.

Tags:    

Similar News