கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!
கொரோனாவின் 2வது அலையை எளிதாக வென்றுவிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.;
கொரோனா இரண்டாவது அலையை எளிதாக வென்று விடலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெருநகரங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதில் சென்னை மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் இடையே இந்த விழிப்புணர்வு தொடர்ந்து நீடித்தால் கொரோனா இரண்டாவது அலையை நாம் எளிதாக வென்று விட முடியும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.