சென்னை மாநகராட்சியில் தீவிர துப்புரவு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

- ஆணையர் அறிவிப்பு.

Update: 2021-05-28 13:43 GMT

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள வார்டுகளில் 27/05/2021 முதல் 05/06/2021 வரை தீவிர துப்புரவு பணிகளை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு அதிகாரியை அமைக்குமாறு 26/05/2021 அன்று ஆணையாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, அனைத்து துறை தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மற்றும் செயற்பொறியாளர்களை கீழ்கண்ட மண்டலத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உமாபதி (செயற்பொறியாளர்) - நகரமைப்பு துறை

டி.கே. கணேசன் செயற்பொறியாளர் - கட்டிடத் துறை 

சக்தி மணிகண்டன்  மேற்பார்வை பொறியாளர் - வட்டார அலுவலகம் வடக்கு

கே.பி விஜயகுமார் மேற்பார்வை பொறியாளர் மழைநீர் வடிகால் துறை

ஜெயராமன் கண்காணிப்பு பொறியாளர் வட்டார அலுவலகம் வடக்கு

துரைசாமி தலைமை பொறியாளர் மின்சாரத்துறை

கே.விஜயகுமார் மேற்பார்வை பொறியாளர் கட்டிடத் துறை

சரவண பவானந்தம் மேற்பார்வை பொறியாளர் வட்டார அலுவலகம்

பி.வி.பாபு மேற்பார்வை பொறியாளர் சிறப்பு திட்டங்கள் துறை

ராஜேந்திரன் தலைமை பொறியாளர் இயந்திரம் மற்றும் கட்டிடம் துறை

ஜி.வீரப்பன் மேற்பார்வை பொறியாளர் திடக்கழிவு மேலாண்மை துறை

N. மகேசன் திடக்கழிவு மேலாண்மை துறை மற்றும் நகரமைப்பு

நந்தகுமார் தலைமை பொறியாளர் தலைமை பொறியாளர் பொது

ஆர். பாலசுப்பிரமணியம் மேற்பார்வை பொறியாளர் வட்டார அலுவலகம் தெற்கு

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இயந்திரப் பொறியியல் துறை

மேற்கண்ட அலுவலர்கள் மண்டலங்களில் தினந்தோறும் ஆய்வு செய்து அறிக்கையை மேற்பார்வை பொறியாளர்களுக்கு அளிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News