மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கு அனுமதி
ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கப்படுவர் என அமைச்சர் தகவல்
ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவ கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேரை சேர்த்து கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதலுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி, முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது:தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் எனவும், சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு உடையவர் என்று கூறினார். மேலும் சிங்கார வேலனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதி எனவும் நினைவு கூர்ந்தார்.
கொரோனா பரிசோதனை பொறுத்தவரை ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம். எனவும் தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனைகள் குறைக்க கூறி இருக்கிறோம். ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவ கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேரை சேர்த்து கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதலுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகளை விரைவு படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கூட வலியுறுத்தி இருக்கிறோம்.எய்ம்ஸ் திட்டத்தின் கட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உடன் இது தொடர்பாக பேசி வருகிறோம். மாணவர் சேர்க்கை நலனை கருத்தில் கொண்டே அனுமதி வழங்கி இருக்கிறோம் என்றார் அமைச்சர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் கெளரிலிங்கம், மாநில பொதுச் செயலாளர்கள் ராஜா,சத்யா,ராஜேஷ்வரி, காஞ்சிபுரம் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் கோசலராமன், மத்திய சென்னை மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் மணிமாறன், உள்ளிட்ட பலர் சிங்காரவேலன் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்னுடைய மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் சிங்கார வேலனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முற்போக்கு சிந்தனையை முதன் முதலில் கொண்டு வந்தவர் சிங்காரவேலர். முழு சுதந்திரம் என்ற கருத்தை வலியுறுத்தியவர். நேரு, திரு.வி.க போன்ற தலைவர்கள் இருந்த மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரவலியுறுத்தினார். பிரிட்டிஷ் அரசுடன் எந்த சமரசம் செய்து கொள்ளக் கூடாது என உறுதியாக இருந்தவர். மாணவர்களுக்கு மதிய உணவு சென்னை மாநகராட்சியில் கொண்டு வர செயல்பட்டவர்..
பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடைய மாவட்ட செயலாளர் செல்வா உள்ளிட்ட பலர் சிங்கார வேலனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலனார். சென்னை நகர மன்றத்தில் உறுப்பினராக பதவியேற்று முதலில் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றவர் சிங்காரவேலனார்வீ டுகளுக்கு சென்று மருத்துவ வைக்கும் திட்டத்தை அன்றைக்கே அமல்படுத்தியவர்.சமூக சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தியவர் சாதிவெறி மதவெறி போன்றவைகளுக்கு எதிராக பாடுபட்டவர் சிங்காரவேலர்
அன்றைய காலகட்டத்தை விட தற்போதைய காலகட்டத்திற்கு சிங்காரவேலர் மிகவும் தேவைப்படுகிறார்.சமூக சீர்திருத்தத்திற்காக மத நல்லிணக்கத்திற்காக மதவெறிக்கு எதிராக போராடுவதற்காக இன்றைக்கு சிங்காரவேலனார் தேவைப்படுகிறார்.பிரிவினைவாதிகளின் ஆட்சி இருக்கக்கூடாது என்று சொன்னால் முதலில் வெளியேற வேண்டியவர் பிரதமர் மோடிதான். இந்துக்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என ஹரித்துவாரில் சாமியார்கள் மாநாட்டில் பேசியவர்கள் மீது பிரதமரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வார்த்தை கூட அதுபற்றி மறுத்துப் பேசவில்லை. இவர்கள் பிரிவினைவாதத்திற்கு துணை போகின்றவர்கள். ஆகையால் பிரிவினைவாத ஆட்சி இருக்கக் கூடாது என்று சொன்னால் முதலில் வெளியே வேண்டியவர் பிரதமர் மோடிதான் என்றார் அவர்.