வேளச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழை : பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

வேளச்சேரியில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-11-07 02:45 GMT

வேளச்சேரியில் பெய்த கனமழையால் சூழ்ந்துள்ள வெள்ள நீர்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டிய, ஐந்துபர்லாங்க் சாலை, வேளச்சேரி ராம்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இரவு முழுவதும் மழை நீர் பெய்த காரணத்தினால் தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காலையிலிருந்தும் மழை பெய்வது தொடர்வதால் சாலையில் தேங்கிய மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு, வானகங்கள் செல்ல ஐந்து பர்லாங் சாலையில் தடை விதிக்கப்பட்டு, போக்கு வரத்து  மாற்றி விடப்பட்டுள்ளது.

ஆங்காங்கே இடுப்பளவு தண்ணீர் தேங்குவதால் தாழ்வான குடியிருப்புகளில் வசிப்போரின் வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர்.
அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் வாங்கவும் செல்ல முடியாத நிலையில் முடங்கி போயிருக்கின்றனர்.
எப்போது மழை பெய்தாலும் பாதிக்கப்படும் வேளச்சேரி ராம்நகர் பகுதிக்கு விடிவுக்காலம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்புடன் பருவ மழையை எதிர்கொண்டு வருகின்றனர் வேளச்சேரி மக்கள். 

Tags:    

Similar News