குட்டி தீவு போல் காட்சியளித்த வரதராஜபுரம்

குட்டி தீவு போல் காட்சியளித்த வரதராஜபுரத்தில் தீயணைப்பு துறையினர் படகு மூலம் அப்பகுதி மக்களை மீட்டனர்.

Update: 2021-11-12 12:02 GMT

தாம்பரம் வரதராஜபுரத்தை சூழ்ந்துள்ள மழை நீர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில்  இன்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம்,அமுதம் நகர் ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் செல்லும் அடையாறு ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது குட்டி தீவு போல் வரதராஜபுரம் காட்சி அளித்தன.

மேலும் அப்பகுதியில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளிலிருந்து அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது

இதனால் அப்பகுதிக்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பொதுமக்களை படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்..

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பாதிக்கப்படாத முடிச்சூர்,வரதராஜபுரம் பகுதிகள் நேற்றிரவு முதல் பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்து குட்டித் தீவு போல் காட்சி அளித்தது..

Tags:    

Similar News