இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரில், 18 பேர் இன்று தாயகம் திரும்பினர்.

Update: 2021-11-27 04:45 GMT

இலங்கையில் விடுவிக்கப்பட்டு, சென்னை திரும்பிய நாகை மீனவர்கள். 

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 11,ஆம் தேதி, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் சிவகுமார், சிவநேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் 13 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தன்பேட்டை, தரங்கம்பாடி, சந்திரபாடி, பெருமாள்பேட்டை மீனவர்கள் 23, பேரை இலங்கை கடற்படையினர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேரில் 18 பேர், இன்று தாயகம் திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த மீனவர்கள், இலங்கையில் இருந்து எங்களை மீட்டெடுத்த மத்திய,  மாநில அரசுகளுக்கு நன்றி.  இலங்கை கடற்படை எந்த தொந்தரவும் அளிக்கவில்லை. பிடிபட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்றனர்.

பிடிக்கப்பட்ட 23 பேரில் தற்போது 18 பேர் மட்டுமே வந்துள்ள நிலையில் மீதமுள்ள ஐந்து மீனவர்களுக்கு,  இலங்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரண்டு மீனவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3 மீனவர்கள் இன்று அல்லது நாளை தாயகம் திரும்புவார்கள் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News