வேளச்சேரியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது
வேளச்சேரியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;
வேளச்சேரியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த 3 வடமாநில இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை வேளச்சேரி, நேரு நகர் மதியழகன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து அங்கு கஞ்சா விற்பனை நடப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து ஆய்வாளர் சந்திர மோகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த, மஷக் மியா(24), ஜாஹிர் உசேன்(23), அன்வர் உசேன்(24), ஆகிய வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து, வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. மூவர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.