எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக ஊழியர்களின் ஒருநாள் ஊதியம், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கல்

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக ஊழிர்கள், ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

Update: 2021-07-01 11:48 GMT

கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

முன்னதாக, பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களை போற்றும் வகையில், மருத்துவக் கல்வி இயக்குநரகம், ஊரக நலப்பணி இயக்குநர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், இஎஸ்ஐ இயக்குநர், இந்திய மருத்துவ ஆணையர், இந்திய மருத்துவக் கழகத்தினர், மகப்பேறு மருத்துவர்களின் கூட்டமைப்பு, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கி முதல்வர் கௌரவித்தார். பின்னர் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News