தமிழகத்தில் இன்று முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது!
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த தமிழக விமான சேவை இன்று தொடங்கியது.;
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட சேலம் - சென்னை இடையேயான விமான போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதன்படி, வழக்கமான போக்குவரத்து அட்டவணையின் அடிப்படையில் சென்னை விமான நிலைய விமானங்கள் இயக்கப்படும். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.