தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கல்

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை, அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார்.

Update: 2021-06-20 17:58 GMT

பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் சுப்ரமணியன் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அருகில் எம்பி.தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

 பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறி ஆகியவற்றை  சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், துணை இயக்குனர் மருத்துவர்  தர்மலிங்கம் மற்றும் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News