தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூழ்ந்தள்ள மழை நீர்

தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-11-12 12:58 GMT

தாம்பரம் அருகே மழையில் சாலையில் விழுந்த மரங்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.  இந்தயில் நிலையில் இன்று  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை குறைந்து விட்டது.

இருந்த போதிலும் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் திருமலை நகர் பகுதிகளில் தொடர் கனமழையால் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

அதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர், திருநீர்மலை,முடிச்சூர்,சேலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்..

குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெளிவரமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அத்தியாவசியமான தேவையான பால், வாங்கவும்,  மருத்துவ மனைக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் தாழ்வான சாலைகளில் குளம் போல மழை சூழ்ந்துள்ளது..

ராஜகீழ்பாக்கம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏரிகரையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன.அதே போல் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் நிர்ம்பி மழைநீர் வெளியேறுவதால் சாலைகலிலும்,குடியிப்பு பகுதிகளிலும் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. மழை விட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News