ஒமிக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது : சுகாதாரத்துறை
ஒமிக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இடமிருந்து மட்டும் தொற்று பரவாமல் சமூகத்திலும் தொற்று பரவி வருகிறது. அதன் உதாரணம் தான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருடமிருந்து பலருக்கு தொற்று பரவியது என்று சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனராக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழக அரசு கொரோனா பேரிடர் காலத்தில் செய்த பணிகளை மத்திய குழு அறிந்திருக்கிறார்கள். மே மாதம் தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தது என்பதை தெரிவித்தோம். செங்கல்பட்டு எச் எல் எல் நிறுவனம், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கலாம். இதனை இயக்க அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டுக்கும் நாட்டுக்கும் பலன் கிடைக்கும் என்று எடுத்து கூறப்பட்டது -
தினசரி சராசரி 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று மத்திய குழுவிடம் தமிழக அரசு தெரிவித்தது.
S gene மாற்றங்கள் இருப்பவர்கள் என நமது ஆய்வகத்தில் கண்டு அறியப்பட்டவர்கள் பேர் 97 இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒமிக்ரான் உறுதியாக இருக்கும். ஆனால் மத்திய அரசு அதிகாரபூர்வமாக் அறிவித்து 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ( இது வரை 34 பேருக்கு ஒமிக்ரான் தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டது. இதில் 18 பேர் வீடு திரும்பியுள்ளனர்)
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மரபணு ஆய்வகத்துக்கு தேவையான அனுமதியை வழங்க அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் ஆகும் அன்றுதான் அவர்களுக்கு பூனேவில் இருந்து தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனவே இந்த கால தாமதத்தை குறைப்பதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் வசதியை நாம் பயன்படுத்திக்கொள்ள மத்திய குழு உதவியாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நாடுகளிலிருந்து வருபவர்களை விட ஆபத்தில்லா நாடுகளிலிருந்து வருபவர்களில் தான் தொற்று அதிகம் கண்டறியப்படுகிறது
எனவே அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஆபத்தில்லா நாடுகளிலிருந்து வருபவர்களில் 2% மட்டுமல்லாமல் 10% பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இடமிருந்து தொற்று ஏற்படுவது என்ற நிலை மாறி சமூக பரவல் என்ற நிலையை எட்டி கொண்டுள்ளது
எனவேதான் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை பார்த்து அதன் மூலம் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் வந்திருக்கும் மத்திய குழு மாநில மரபணு பகுப்பாய்வு கூடம், கட்டளை மையம், பொது சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு மையம், கிண்டி கிங் மருத்துவமனை, சென்னை விமான நிலையம் மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள் என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.