வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை: எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு
தரமணி - வேளச்சேரி பறக்கும் ரயில் சுரங்கப்பாதை தாமதமாகிக் கொண்டிருக்கும் பணிகளை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வேளாச்சேரி எம் எல் வுடன் ஆய்வு செய்தார்;
சென்னையில், தரமணி - வேளச்சேரி பறக்கும் ரயில் பாதையை ஒட்டிய பகுதியில், பணிகள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் பாலம் - சுரங்கப்பாதைப் பணிகளை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், வேளாச்சேரி எம் எல் -வுடன் ஆய்வு செய்தார்.
உடனடியாக பாலம் பணிகளை முடித்து, பாலம் - சுரங்கப்பாதையினை, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரக்கோரி, ரயில்வே, மாநகராட்சி அதிகாரிகளை, எம்பி அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்போது, பகுதி திமுக செயலாளர் சு.சேகர், தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.