கொரோனாவால் பாதிக்கப்பட்ட வண்டலூர் சிங்கங்கள்; அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-15 02:13 GMT

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கோவிட் சார்ஸ் -2 தொற்றால் பாதிக்கபட்ட சிங்கங்கள் இருக்கும் பகுதியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்  நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட பின்னர் சிங்கங்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 சிங்கங்களுக்கு கொரோனா இருந்தாலும். 2 வயது முதிர்ந்த சிங்கங்கள் சிறிது சோர்வாக உள்ளது. இந்த சிங்கங்கள் மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

அதுபோல், புலிகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதனால் மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவியதாகத் தகவல் எதுவும் இல்லை. அதுபோல் முதுமலை, டாப் சிலிப் ஆகிய இரண்டு யானைகள் முகாம்களிலும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனைகளுக்கு அனுப்பிய நிலையில் முதுமலையில் உள்ள 18 யானைகளுக்கும் கொரோனா நெகடிவ் என வந்துள்ளது.

அதனால் சிங்கங்களைத் தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவ வில்லை, மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க விலங்கு பராமரிப்பாளர்களுக்கு 100 சதவீகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்த உறுதி செய்துள்ளோம். அதுபோல் பி.பி.இ கிட் அணிந்தவர்கள் மட்டும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் அருகே சென்று பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News