இம்ப்காம்ஸ் மருத்துவமனை, சித்தா கோவிட் மருத்துவ மையம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை: துரைப்பாக்கத்தில் இம்காப்ஸ் மருத்துவமனை மற்றும் சித்தா கோவிட் மருத்துவ மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா..சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கப்பாண்டியன் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் இணை இயக்குனர் மருத்துவர் பார்த்திபன் மற்றும் இம்ப்காப்ஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.