கோவிட் பரிசோதனை: இலங்கை விமானத்தில் அனுமதிக்கததால் பயணிகள் கடும் அதிருப்தி
அதிகாரிகள் துபை செல்லும் பயணிகள் ரேபிட் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே விமானத்தில் அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்;
சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 42 பயணிகளை அனுமதிக்காததால், பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்பு வழியாக துபை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் காலை 10 மணிக்குப் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் துபைக்கு செல்லும் 42 பயணிகள் விமான நிலையத்தில் கொரோனா சான்றிதழ் பரிசோதனை செய்தனர்.
அப்போது அதிகாரிகள் துபை செல்லும் பயணிகள் ரேபிட் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே விமானத்தில் அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபை செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் ஆகும். எனவே ராபிட் டெஸ்ட் 6 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என கூறி ரேபிட் பரிசோதனை செய்ய மறுத்துள்ளனர்.இதனால் 42 பயணிகளும் விமானத்தில் ஏற முடியாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், விமானம் புறப்பட்டுச் சென்றது குறித்து பயணிகள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையாக எந்த பதிலும் அளிக்காமல் நீங்கள் முன்பதிவு செய்த பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் தெரிவித்தாராம். இதனால் பயணிகளுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இல
இது குறித்து பயணிகள் கூறுகையில், முன்கூட்டியே தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் டிக்கெட்டை முன் பதிவு செய்துள்ளனர். எனவே துபை செல்லும் மாற்று விமானம் மூலமாக அல்லது நேரடி விமானத்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.