சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு : வெளியேறுவதாக உதவி பேராசிரியர் கடிதம்
சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதால், ஐஐடி விட்டு செல்வதாக கூறி, உதவி பேராசிரியர் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதால் ஐஐடி விட்டு செல்வதாக உதவி பேராசிரியர் ஐஐடி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த விபின் என்பவர் தான் வேலை பார்க்கக்கூடிய துறையில் சாதி பாகுபாடு இருப்பதாகவும், இதை பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, தான் பணியில் இருந்து வெளியேறுவதாகவும், வேறு நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று மின்னஞ்சல் மூலமாக ஐஐடி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது ஐஐடி நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐஐடியில் நிகழக்கூடிய சாதி ரீதியான பாகுபாடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிநல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விரிவான ஒரு அமைப்பை ஏற்படுத்தி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.