சென்னை விமானநிலையத்தில் தொடர் விடுமுறையால் குறைந்தது விமான சேவை
சென்னை விமானநிலையத்தில் தொடர் விடுமுறை காரணமாக விமான சேவை குறைந்தது. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது.
இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை தாக்கம் தொடங்கியது. அப்போது மத்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தியதால் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் மே மாதம் உள்நாட்டு முனையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதித்தது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 50 விமானங்களின் சேவை மட்டுமே அனுமதிக்கப் பட்டது.
பயணிகள் எண்ணிக்கை அதிகாரிக்கும் போது கொரோனா 2வது அலை தாக்கம் அதிகமானதால் மீண்டும் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 2வது அலை குறைந்ததும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டன.
சென்னையில் இருந்து 25 நகரங்களுக்கு 100ல் இருந்து 200 வரை விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டன.அக்டோபார் மாத இறுதியில் 100 சதவீதம் உள்நாட்டு விமான சேவை அதிகரிக்க மத்திய அரசு அனுமதித்தது.
சென்னை உள்நாட்டு முனையத்தில் தீபாவளிக்கு முன் 250 விமான சேவை இயக்கப்பட்டது.தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக விமான போக்குவரத்து குறைந்தது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர்,ஐதராபாத், கோவை, மதுரை உள்பட 35 நகரங்களுக்கு 120 விமானங்கள் புறப்பட்டு செல்லவும் மீண்டும் சென்னைக்கு 115 விமானங்கள் திரும்பி வரவும் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து மும்பைக்கு தலா 16 விமானங்கள் இயக்கப்பட்டன. டெல்லிக்கு 15 விமானங்களும் கொல்கத்தாவிற்கு 9 விமானங்களும்,ஐதரபாத்திற்கு 10 விமானங்களும் பெங்களூரு, கோவைக்கு 7 விமானங்களும் மதுரைக்கு 5 விமானங்களும் அகமதாபாத்,அந்தமான் ஆகிய நகரங்களுக்கு தலா 4 விமானங்களும், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், திருச்சி, கொச்சி, புனே ஆகிய நகரங்களுக்கு தலா 3 விமானங்களும் திருவனந்தபுரம், கவுகாத்தி, விஜயவாடா, ஜெய்பூர், ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு தலா 2 விமானங்களும் ஹூப்ளி, பாட்னா, கன்னூர், லக்னோ, மைசூர், ஜோத்பூர் உள்பட 15 நகரங்களுக்கு தலா 1 விமானங்களும் இயக்கப்பட்டன.
இதுபோல் 35 நகரங்களிலும் இருந்து விமானங்கள் சென்னைக்கு 115 விமானங்கள் வந்தன.
தொடர் விடுமுறையால் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் குறைக்கப்பட்டன.அதுப்போல் சென்னையில் பிற நகரங்களுக்கு சென்ற 120 விமானங்களில் 8894 பேர் பயணம் செய்தனர்.பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 115 விமானங்கள் 8547 பேர் வந்தனர்.கடந்த 3 தினங்களுக்கு முன் 30 ஆயிரம் பேர் பயணம் செய்த நிலையில் தற்போது 17 ஆயிரத்தி 441 பேர் பயணித்து உள்ளனர்.
தொடர் விடுமுறைக்கு பின் மீண்டும் விமான போக்குவரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.