சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய 1453 வாகனங்கள் பறிமுதல்!

சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 1453 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-25 10:28 GMT

வாகன சோதனையில் போலீசார்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் நடத்திய வாகன சோதனையில் தகுந்த ஆவணங்கள் இன்றி வெளிய வந்த 1453 வாகனங்களை சென்னை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இதில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளிய சுற்றியதாக 1497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1453 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News