கொரோனா தொற்று: விசிக பொருளாளர் காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப், உயிரிழந்தார்.;

Update: 2021-05-15 04:50 GMT

விசிக பொருளாளர் முகமது யூசுப்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  பொருளாளர் முகமது யூசுப்புக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தர். அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News