தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய்த் தொற்றுள்ளவர்களை கண்டறிந்து தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துச் செயல்பட்டு வருகிறது.
அதன்படி ஏப்ரல்14 முதல் ஏப்ரல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்களில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 80 லட்சம் பேரில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 22 லட்சம் பேர் உள்ளனர். இதில் சுமார் 42% வரை எட்டிவிட்டோம். 10லிருந்து 15 லட்சம் வரை தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஆகவே, விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிடுவோம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.