மதத் தலைவர்களுடன் அவசர ஆலோசனை
வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் கட்டுப்பாடு..? தலைமைச்செயலர்;
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 3000க்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று காலை அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் இந்து மதத் தலைவர்கள், மடாதிபதிகள், இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள், கிறித்தவ மதத் தலைவர்களுடன், சுகாதாரத் துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.