பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள்: மத்திய இணை அமைச்சர் முருகன் பால்குடம்
பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன் பால்குடம் எடுத்தார்.;
மக்கள் முன்னிலையில் 1008 பால்குடம் ஏந்தி பெண்கள் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். புழல் லட்சுமிபுரம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மோடி பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து அனைவரும் விடுபடும் வகையில் பெண்கள் 1008 பால்குடம் ஏந்தி பிருந்தாவன கிருஷ்ணர் கோவில் வழியாக ஊர்வலமாக சென்று முத்துமாரி அம்மன் கோவிலில் பால் அபிசேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதில் தகவல் ஒளிபரப்புத் துறை மத்திய இணை அமைச்சர் எல்முருகன் கலந்து கொண்டார். இதில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிவா, பொதுச் செயலாளர் சசிதரன், உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.