சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது, அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்

சுற்றுலாத் தலங்கள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் மதிவேந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-06-20 03:00 GMT

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் (பைல் படம்)

சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு டூரிசம் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவகத்தை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளரஅருந்ததி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதி வேந்தன் கூறியதாவது.:

உணவகத்தின் ஊட்கட்டமைப்பு, ஊழியர்களின் தேவை, சமையலறை, உணவின் ரகங்கள் உள்ளிட்டவைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ததாக விளக்கமளித்தார்.

வேறு என்ன என்ன உணவு ரகங்களை கொண்டு வரலாம், தனியார் உணவகங்களுக்கு இணையாக தமிழ்நாடு டூரிசம் உணவகங்களில் பொது மக்களை ஈர்க்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

பின்னர் தீவுத்திடல் பகுதி முழுவதையும் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பராமரிப்பு பணிகள், உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். கொரோனா தொற்று குறைந்தவுடன் சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News