தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!
தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது
தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதால், அடுத்த 10 நாட்களுக்கு தட்டுப்பாடியின்றி தடுப்பூசிகள் கிடைக்கும் வகையில், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.