நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல்10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக இது வழங்கப்படும். மொத்தம் 6810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் வழங்க ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.