ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒடுக்க கையெழுத்து பயணம் துவக்கம்
சென்னையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒடுக்க கையெழுத்து பயணம் துவக்கி வைக்கப்பட்டது.
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கையெழுத்து பயணத்தை அதன் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில்
ஒவ்வொரு தேர்தலிலும் பொது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர் அதை ஒடுக்க வேண்டும். மேலும் இது போன்ற செயல்களை செய்துவரும் வேட்பாளர்களை அடியோடு சிறைவாசல் தள்ள வேண்டும். மறுபடியும் வேட்பாளராக நிற்க வைக்க கூடாது.
மதுரையில் நந்தினி, ஆனந்த் ஆகியோர் பொது மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் ஒரே நோக்கத்துடன் தான் பயணம் செய்து வருகின்றனர். அதே போல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்து விடலாம் என்று வந்தவர்களை கிண்டி காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக நந்தினி ஆனந்த் மற்றும் அவரது தந்தையை கைது செய்து பொய்வழக்கு மூலம் சிறையில் அடைத்தனர்
அதுபோல் பொய்யான வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தாலும் சரி நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.