ஜனவரி 6 மற்றும் 7 ம் தேதிகளில் சட்டப்பேரவை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு தகவல்
ஆளுநர் தனது உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் எனக் கூறி நிறைவு செய்ததில் தவறொன்றுமில்லை என்றார் பேரவைத் தலைவர் அப்பாவு;
ஜனவரி 6 மற்றும் 7 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு தகவல்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்ன்ர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் நிறைவுபெற்றது அதன்பிறகு நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் அனைத்து கட்சி சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்கள் சட்டப்பேரவை நடைபெறும்.நாளை இரங்கல் தீர்மானம் மற்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று விவாதம் நடைபெறும். நாளை மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வரின் பதிலுரை நடைபெறும்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதே நோக்கம். கேள்வி பதில் விவாதம் மற்றும் நன்றியுரை ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஆளுநர் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என சொல்லி முடிவு செய்தார். அது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், ஜெய்ஹிந்த் என சொல்வதில் தவறொன்றுமில்லை எனக் கூறினார்.